நண்பர்களே!! தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம், பொன்னியின் செல்வன் படித்த நாட்களில் இருந்தே எனக்கு உண்டு. "தமிழனாய் இருந்து கொண்டு இன்னுமா தமிழ் கற்றுக்கொள்ள வில்லை?" என்று கேட்காதீர்கள். 'கற்றது கை அளவு, கல்லாதது உலகலவாயிற்றே!!' :).
இன்றைய தேதியில் internet-ஏ ஆசிரியர். ஆகையால், என்னால் முடிந்த வரை சுயமாக படித்துக் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்தேன். அகநானூறு,சிலப்பதிகாரம் என்றெல்லாம் ஆரம்பித்தேன். எடுத்த வேகத்தில் மூடி வைத்து விட்டேன். தமிழின் அணிகலன்கள் அல்லவா அவைகள். இப்போதைக்கு என் அலமாரியை மட்டும் அலங்கரிக்கின்றன. இப்போதைக்கு எளிமையாக தமிழ் சினிமா பாடல் வரிகளில் இருந்தாவது கற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அதற்கே நெட்-ல் மணிக்கணக்கில் தேட வேண்டி இருக்கிறது. அவ்வாறு தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைத்தளம். நான் பகிர்வதில் தவேறுதும் இருந்தால் என்னை திருத்தவும்.
இந்த வாரம் கவுதம் மேனன்-ன் அடுத்த படமான 'அச்சம் என்பது மடமையடா'-வில் இருந்து 'அவளும் நானும்' என்ற பாடல் வரிகளை படித்து சில புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டேன். இந்தப் பாடல், பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது என்றும் அறிந்தேன்.
பாடல் முழுவதும் காதலன் காதலி இணை பிரியாமல் இருப்பதை பல ஒத்த விஷயங்களுடன் ஒப்பிடுவதாக நினைக்கிறேன்.
பாடல் வரிகளின் விளக்கமும் ஆங்கிலத்தில் பொருளும் :
(விளக்கம் இல்லாத இடங்கள்-க்கு அகராதி-இன் உதவி இல்லாமல் நான் புரிந்து கொண்டேன் என்று அர்த்தம். அவ்வாறே தங்களுக்கும் விளங்கும் என்று நம்பி என் சோம்பேறித்தனத்தை ஞயாயப்படுத்துகிறன்.
அவளும் நானும் (she and I....)
அமுதும் தமிழும் (nectar and Tamil)
அவளும் நானும் (she and I....)
அலையும் கடலும் (Waves and Oceans)
அவளும் நானும் (she and I....)
தவமும் அருளும் (penance and boon)
அவளும் நானும் (she and I....)
வேரும் மரமும் (Root and tree)
ஆலும் நிழலும் (banyan and Shadow)
--ஆல் - ஆலமரம். ஆலமரம் எப்படி இருக்கும் என்று அறியாதவர்கள் google-ன் உதவியை நாடவும்.
அசைவும் நடிப்பும் (movement and acting)
அணியும் பணிவும் (greatness and humility)
--அணி - என்ற சொல்லிற்கு அணிகலன், அணிவது, அணிவகுத்தல் என்று பல அர்த்தங்கள் உண்டு தமிழில். ஆனால் இங்கு 'பெருமை' என்று ஒரு அர்த்தம் இருப்பதை அறிந்தேன். அதுவே இங்கு பணிவுடன் இணைந்து நிற்கும் ஒரு குணமாக விளங்குகிறது.
அவளும் நானும் (she and I....)
அவையும் துணிவும் (Assembly and courage)
உழைப்பும் தழைப்பும் (hardwork and success)
அவளும் நானும் (she and I....)
அளித்தலும் புகழும் (charity and fame)
--அளித்தல் - அளிப்பது; கொடுப்பது; கொடை
மீனும் புனலும் (fish and river)
-- புனல் - ஆறு . 'குருதி புனல்' தலைப்பு பலருக்கும் ஞயாபகம் இருக்கக் கூடும்.
ம்ம் விண்ணும் விரிவும் (sky and explansion)
வெற்பும் தோற்றமும் (mountain and sunrise)
-- வெற்பு - மலை ; தோற்றம் - appearance, rise என்று இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஆனால் இங்கு சூரியன் மலையின் பின்னே தினமும் உதயமாவதை(rise) ஒப்பிடுவதாக எண்ணுகிறேன்.
வேலும் கூரும் (spear and sharped edge)
ஆறும் கரையும் (river and riverside)
அம்பும் வில்லும் (arrow and bow)
பாட்டும் உரையும் (poem and commentary/notes)
நானும் அவளும் (I and She...)
நானும் அவளும் (I and She...)
உயிரும் உடம்பும் (life and body)
நரம்பும் யாழும் (string and harp)
பூவும் மணமும் (flower and fragrance)
நானும் அவளும் (I and She...)
உயிரும் உடம்பும் (life and body)
நரம்பும் யாழும் (string and harp)
பூவும் மணமும் (flower and fragrance)
அவளும் நானும் (she and I....)
தேனும் இனிப்பும் (honey and sweetness)
அவளும் நானும் (she and I....)
சிரிப்பும் மகிழ்வும் (laugh and happiness)
அவளும் நானும் (she and I....)
திங்களும் குளிரும் (moon and cold)
-- திங்கள் - மாதம், திங்கட்கிழமை, சந்திரன். இங்கு சந்திரனும் குளிரும் என்பது பொருந்துகிறது.
அவளும் நானும் (she and I....)
கதிரும் ஒளியும் (sun and light)
முன்பே கூறியது போல், தவேறுதும் இருந்தால் என்னை திருத்தவும். திருத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன். அடுத்த வாரம் மற்றுமோர் நல்ல பாடலுடன் சாதிப்போம்.
இளவரசன் ராஜன்
No comments:
Post a Comment